அன்னவாசல், ஜூலை.21-
இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் தேவி (வயது35). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்டவ் அடுப்பு வெடித்து தேவி மீது தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.