மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 30 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் கொரோனாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார்.