மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.

சங்கராபுரம்,

உளுந்தூர்பேட்டை தாலுகா செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (வயது 28). இவர் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சங்கீதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சங்கராபுரம் போலீசில் இறந்த சங்கீதாவின் தாய் மங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.