மாவட்ட செய்திகள்

தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் மனைவி ரஞ்சிதா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா, மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.