கரூர்
வாங்கல் மேலசக்கர பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி துர்கா (வயது 36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட துர்கா, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் துர்கா அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்காவின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.