மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி

மின்னல் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகரில் கடந்த 13-ந்தேதி மின்னல் தாக்கி உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்கள் ஜெயசூர்யா, முருகன், கார்த்திக் ராஜா மற்றும் ஜக்கம்மாள் ஆகியோரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., கலெக்டர் மேகநாதரெட்டி, திட்ட இயக்குனர் திலகவதி, விருதுநகர் நகராட்சித்தலைவர் மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.