மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் 30 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

30 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் 30 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி ஜோலார்பேட்டை பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் நேற்று பொன்னேரி மற்றும் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனங்களில் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 70 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர். சந்தைக்கோடியூர், பக்கிரிதக்கா, பால்னாங்குப்பம், ஒட்டப்பட்டி, பெரிய மூக்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா விதிமுறைகள் மீறி சிக்கன் மற்றும் மட்டன் கடைகள் திறந்து வைத்து வியாபாரம் செய்த 30 கடைகளுக்கு தலா ரூ.500 விதம் 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கு போது ஒரே நாளில் 100 பேருக்கு 29 அபராதம் விதித்தனர்.