புதுச்சேரி

துணிக்கடையில் தீ விபத்து

புதுச்சேரி காமராஜர் சாலையில் துணிக்கடை ஒன்றில் திடீரென்று தீப்பிடித்து கரும்புகை வந்தது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் சாலையில் துணிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் மின்சார பெட்டியில் இன்று இரவு 8.45 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே சென்றனர்.

தீ விபத்து பற்றி கடை ஊழியர்கள் புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று மின்சார பெட்டியில் பற்றி எரிந்த தீயை ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இன்று மாலை அண்ணாசாலை, அரவிந்தர் வீதி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனையும் தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து