மும்பை

ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது

ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கிரெடிட் கார்டு மோசடி

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்கள் சிலர் புகார் அளித்தனர். அவர்கள் தங்கள் கிரெடிட் கார்டுக்கு வர வேண்டிய 'கேஷ்பேக்' சலுகை பணம் வருவதில்லை என புகார் அளித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் வங்கியில் முன்பு வேலை பார்த்த நிதின் காரே (வயது 41) என்பவர் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு கேஷ்பேக் சலுகை பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

ரூ.4 கோடி மோசடி

அவர் 83 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி சார்பில் சாக்கி நாக்கா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் தொடர்புடைய முன்னாள் வங்கி ஊழியர் நிதின் காரேயை கைது செய்தனர்.

மேலும் மோசடியில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை