மும்பை,
மும்பை கோவண்டி சிவாஜி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது தனது தாய் மற்றும் 62 வயது வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தாள். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் தனது மகளின் உடல் பாதிப்பு ஏற்பட்டதை தாய் அறிந்தார். இதனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினார். அதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கொடுத்து வளர்ப்பு தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை சிறுமி தெரிவித்தாள். இது குறித்து சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். இவர் உறவினரை கொலை செய்த குற்றத்திற்காக 19 வருடமாக சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என தெரியவந்தது.