காரைக்குடி,
காரைக்குடி டி.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது51) இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் தனது தொழில் தேவைக்காகவும் குடும்ப தேவைக்காகவும் ரூ.20 லட்சம் கடனாக பெற்று உள்ளார்.அவர் குறிப்பிட்ட காலத்தில் திருப்பித் தருவதாக கூறியும் திருப்பித் தரவில்லை இதுகுறித்து சரவணன் கேட்டபோது முறையான பதில் கூறவில்லை.எனவே சரவணன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதனையொட்டி வடக்கு போலீசார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.