புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 31 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 31 பேருக்கு இலவச சைக்கிள் வழங்குதல், பள்ளி ஆண்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமர்தேவ் தலைமை தாங்கினார். ஆசிரியை மாலதி வரவேற்றார்.

அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். முடிவில் ஆசிரியர் ஜெயசந்திரன் நன்றி கூறினார். இதேபோல் வீராம்பட்டினம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 50 பேருக்கு இலவச சைக்கிளை பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கலா, பொறுப்பாசிரியர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...