புதுச்சேரி
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னாத்தா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 200 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.