மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மோதி பெயிண்டர் பலி

சரக்கு ஆட்டோ மோதி பெயிண்டர் உயிரிழந்தார்.

லால்குடி:

லால்குடியை அடுத்த நெருஞ்சிகுடி மாந்துறை கிராமத்தை சர்ந்த பழனிவேலின் மகன் முருகானந்தம் (வயது 35). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அபிஷேகபுரம் கொள்ளிடக்கரையில் இருந்து லால்குடி நோக்கி மாட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது லால்குடியில் இருந்து கூகூருக்கு சிமெண்டு ஏற்றிச்சென்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு சென்று முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை(45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முருகானந்தத்திற்கு நித்தியா என்ற மனைவியும், பருமன்(4) என்ற மகனும், துர்காஸ்ரீ(2) என்ற மகளும் உள்ளனர்.