சினிமா துளிகள்

மீண்டும் நடிக்கும் கங்கை அமரன் 8 வருடங்களுக்கு பிறகு

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார்.

தினத்தந்தி

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார். சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் படத்தில் நித்தம் நித்தம் நெல்லுசோறு, நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாழ்திறவாய் என்று 35-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதி உள்ளார். இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார். 2013-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 8 வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கங்கை அமரன் நடிக்கிறார். ஜோதிடர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். கங்கை அமரன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தில் அருண் விஜய் நாயகனாகவும், பிரியா பவானிசங்கர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். ராதிகா, யோகிபாபு, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோரும் உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு