சினிமா துளிகள்

கவுதம் கார்த்திக், சேரன் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

கவுதம் கார்த்திக், சேரன் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் விக்னேஷ், சரவணன், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணன், சினேகன், சிவாத்மிகா, மவுனிகா, சூசன், மதுமிதா உள்பட 40 நடிகர்-நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள். நந்தா பெரியசாமி டைரக்டு செய்கிறார்.

தினத்தந்தி

இவர் கூறியதாவது:

ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடந்தது. 40 நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக, கேரவன்களை வரவழைத்து இருந்தோம். ஆனால் யாரும் கேரவன்களை பயன்படுத்தவில்லை. வெளியில் அமர்ந்தே பேசிப்பழகினார்கள். அரட்டை கச்சேரியுடன், படப்பிடிப்பு தளம் கலகலப்பாக காணப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் அத்தனை பேருக்கும் ஒரே சமையல், ஒரே சாப்பாடுதான். ஒரு குடும்பம் போல் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

இந்த படத்தில் கவுதம் கார்த்திக், லாரி செட்டில் வேலை செய்பவராகவும், சிவாத்மிகா டி.வி. ஆங்கராகவும் நடிக்கிறார்கள். இது ஒரு குடும்ப கதை. பிரிந்து கிடக்கும் 2 குடும்பங்களை கதாநாயகன் எப்படி ஒன்று சேர்க்கிறார்? என்பது கதை.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்