அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, ஒன்றிய, மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றிருந்தனர். கொரோனா விதிமுறைகள் அமலில் இருந்ததால் அவர்களுக்கு பள்ளியில் பரிசளிக்கும் விழா நடந்த முடியாமல் போனது. தற்போது கொரோனா நடைமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமா தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சகிலாதேவி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்திமணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜி.ஆர். மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.