சென்னை அடுத்த மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் டார்லியா வயது (6). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது அவரை பாம்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
விஷம் ஏறிய நிலையில், அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.