தூத்துக்குடி மடத்தூர், பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகள் தனுஷா (வயது 4) என்பவருடன் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மகளை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ஐயர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 4 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.