மாவட்ட செய்திகள்

சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

காதல் தகராறில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தானே,

தானே மாவட்டம் கல்வாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் சென்றிருந்தார். அப்போது அங்கு கமல்காந்த் சைனி (21) என்பவருடன் சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் மும்பை வந்த கமல்காந்த் சைனி அரசு தேர்வு எழுத வேண்டும் என்று கூறிக்கொண்டு சிறுமி வீட்டில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று தன்னுடன் சொந்த ஊருக்கு வருமாறு சிறுமியை அழைத்தார். சிறுமி அவருடன் செல்ல மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.