பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகரில் திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் புறநகர் தண்ணீர்பந்தல் செங்குணம் கைகாட்டி அருகே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு இனங்கள், ஆடுகளை வளர்க்கும் முறை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, குட்டிகள் பராமரிக்கும் முறை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 9385307022 செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து, கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.