புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி

உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் யோகா பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி ஊழியாகளுக்கு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஊழியர்களின் உடல் மற்றும் மனநலம் மேம்பட யோகா மற்றும் மூச்சு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க இன்று நடந்தது. நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்து கொண்டு யோக பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் யோகா பயிற்சி கலைஞர் விஜயகுமாரி கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். இ்ந்த யோகா பயிற்சியில் ஊழியர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அடுத்த கட்டமாக வருகிற 16-ந் தேதி இதே போல் ஊழியர்களுக்கு மீண்டும் யோகா பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேபோல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வார அல்லது மாத இறுதி நாட்களில் நகராட்சி பூங்காக்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை