புதுச்சேரி

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி செங்குலத்தாள் (வயது 73). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜாமணி இறந்து விட்டார். இதனால் செங்குலத்தாள் தனியாக வசித்து வந்தார். தனிமையில் வசித்து வந்ததால் செங்குலத்தாள் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.