சினிமா துளிகள்

படப்பிடிப்பை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரெபெல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை