சினிமா துளிகள்

திருமணத்தை வெறுக்கும் சார்மி

தமிழில் சிம்பு ஜோடியாக காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமான சார்மி

தினத்தந்தி

தொடர்ந்து காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சார்மி 2 வருடங்களுக்கு முன்பு காதலில் தோல்வி அடைந்ததாக தெரிவித்து இருந்தார். அவர் கூறும்போது, வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டது. ஒரு வேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் காதல் முறிந்த காரணத்தை வைத்து பிரிந்து இருப்போம். ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்னால் முடியாது. எனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது சார்மிக்கு 33 வயது ஆகிறது.

இந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றி திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள சார்மி, நான் இப்போது சினிமா துறையில் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். எனது வாழ்க்கையில் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளும் தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்