புதுச்சேரி

சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுவை சுகாதாரத்துறைக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை சுகாதாரத்துறைக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் செயல்படும் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையத்தின் சேவைகளை மேம்படுத்த பெரிதும் பயன்படும். பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு இதயநோய் கண்டறியப்பட்டால் பல்துறை பராமரிப்பு வழங்கப்படும்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு இதய சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அப்போது இதயநோயால் பாதிக்கப்பட்ட 23 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து