சினிமா துளிகள்

சமந்தாவுக்கு உடல் நலம் பாதிப்பு

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் கடப்பாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

நேற்று சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். ஆனால், அது பற்றி பரபரப்பான வதந்தியை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சமந்தா பற்றி வதந்திக்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம், என கேட்டுக் கொண்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு