ஆரோக்யம்

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தினத்தந்தி

சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை பருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறு வயதில் பலரும் ருசித்திருப்பார்கள். தேங்காய் துருவும்போது சிறிதளவு எடுத்து ருசிக்கவும் செய்வார்கள். பொதுவாக தேங்காயில் சுவை மட்டுமல்லாமல் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். தினமும் 40-50 கிராம் பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதில்லை. வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடும்போது இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மைகள் கிடைக்கும். இதை பச்சையாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பலப்படுத்தப்படுகிறது. உடலில் நிறைந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

தேங்காய் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சருமம் எப்போதும் இளமையான தோற்ற பொலிவில் மிளிரும். இதன் காரணமாகத் தான் முடி மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களில் தேங்காய் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய்க்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உண்டு. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். அதேசமயம், அதிகப்படியாக தேங்காய் சாப்பிடுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து