மும்பை

அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

4 நாட்களுக்கு...

மும்பையில் பருவமழை தாமதமாகி வந்த நிலையில் நேற்று திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். நேற்று விடுக்கப்பட்டு இருந்த பச்சை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையா மாற்றியது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமை வரை 4 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலிபாக் வரை

மும்பை தவிர தானே, பால்கர் பகுதிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 48 மணி நேரத்தில் மும்பையில் பருவமழை தொடங்கும் என நேற்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது. பருவ மழை அலிபாக் வரை வந்துவிட்டது. நாளை அது மும்பை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை