கரூர் 
மாவட்ட செய்திகள்

கரூ மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது.

கரூ மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

ஹெல்மெட்

கரூர் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு அரசு அலுவலகங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். டாஸ்மாக்குகளில் மதுபானம் வழங்கப்படாது. ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படமாட்டாது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது.

மளிகை கடைகளில் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 18-ந்தேதி முதல் கரூர் மனோகரா கார்னர், திருமாநிலையூர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, ஜவகர்பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

பெட்ரோல் கிடையாது

மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின்படி இன்று முதல் (திங்கட்கிழமை) ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என கரூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது எனவும், சீட் பெல்ட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் கிடையாது எனவும் கரூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.