கதையும், கதாபாத்திரமும் தனக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்பதில் தனுஷ் கவனமாக இருக்கிறார். இப்போது அவர் வெற்றிமாறன் டைரக்ஷனில் ஒரு படம், மாரி செல்வராஜ் டைரக்ஷனில் ஒரு படம் என 2 புதிய படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை 2 பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.
அதில், ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுசுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்!