சாத்தான்குளம்:
பேய்குளம் அருகே உள்ள வசவப்பனேரி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாமணி மகன் பொன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று காலையில் இவர் குடும்பத்தினருடன் குளத்து வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பதறிப்போன அவரும், குடும்பத்தனரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.