உசிலம்பட்டி,
நிர்வாகி ராமராஜன், முதல்வர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாகி சென்னக்கிருஷ்ணன் கொடியேற்றினார். நிர்வாகி பெருமாள், கல்லூரி முதல்வர் செல்வக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி லோகநாதன் கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் சந்திரன், பள்ளி முதல்வர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாலிடெக்னிக் கல்லூரியில் நிர்வாகி சுப்பிரமணி கொடியேற்றினார்.நிர்வாகி ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சுபாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பொன்.கருணாநிதி கொடியேற்றினார். முதல்வர் ஆறுமுகசுந்தரி முன்னிலை வகித்தார். அரிசன் தொடக்கப்பள்ளியில் நிர்வாகி திருமலைக்குமார் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஞானசெல்வி முன்னிலை வகித்தார்.சின்னக்கட்டளை பாரதியார் பள்ளியில் நிர்வாகி வரதராஜன் கொடியேற்றினார். முதல்வர் சவுந்திரா முன்னிலை வகித்தார். எழுமலை விஷ்வ வித்யாலய பள்ளியில் செயலாளர் இளமாறன் கொடியேற்றினார். முதல்வர் ஜெயகாந்தன்முத்துவேல், நிர்வாகிகள் குஜராத் முருகன், மதன்குமார், அருள்குமார், பிரபு, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள ஏ.வாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேலாண்மை குழு தலைவி சீத்தாலெட்சுமி தேசியக்கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர் கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாலார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியர் ஜக்கம்மாள் கொடியேற்றினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செல்லாயிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அன்னக்கொடி, கருப்பையா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செக்கானூரணியில் உள்ள கேரன் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் சதாசிவம் தேசியக் கொடியை ஏற்றினார்.பள்ளி முதல்வர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் ஜாய்ராஜன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் கேரன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதேபோல செக்கானூரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. அதில் கிளை மேலாளர் செல்வராஜ் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தையில் சுதந்திரதின விழா நிர்வாக அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் உதவி நிர்வாக அலுவலர்கள் ரகுராமன், அசோக்மணி, தமிழ்செல்வம், கலை தொண்டு நிறுவன நிர்வாகி துரைபாண்டி ஆகியோர் முன்னிலையில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சந்தை விதிமுறைகளை உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை சந்தை பணியாளர்கள் திராவிடமாரி, பாக்கியநாதன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சந்தை நிர்வாக அலுவலர் நன்றி கூறினார்.