புதுச்சேரி

ஓட்டல் ஊழியர் சாவு

முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றோடென்று மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரழந்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி

விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 33). இவர் புதுவையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு ஓட்டலில் பணிமுடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், பிரதாபன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாபன் தலையில் அடிப்பட்டு பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்