குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அஜித் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வலிமை படத்தில் புகழ் நடித்திருக்கிறார். வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவதன் மத்தியில் அந்த டிரைலரில் புகழ் இடம் பெற்றிருந்ததை குறித்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் அந்த டிரைலரில் அவர் இடம் பெற்றிருந்ததை குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டு இருக்கிறார். அதில், அஜித் சார்.. இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ் என்று பதிவிட்டு நடிகர் அஜித்துடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.