சினிமா துளிகள்

நான் ஏற்கனவே 80 முறை இறந்தவன் - தம்பி ராமையா

தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற தம்பி ராமையா, நான் ஏற்கனவே 80 முறை இறந்தவன் என்று பேசியிருக்கிறார்.

தினத்தந்தி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தம்பி ராமையா பேசும் போது, இந்த விழாவில் இரண்டு தந்தைகளின் நெகிழ்வை பார்த்தேன். ஒன்று லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன். மற்றொன்று கோடாங்கி. இவர்கள் இரண்டு பேரும் தனது பிள்ளைகளை இசையமைத்து, ஆட வைத்து நெகிழ்ந்து இருக்கிறார்கள்.

என் தாய்தான் என்னை வளர்த்தார். அவர் இறந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. அவருக்கு பின், என் மனைவி தற்போது தாயை போல் இருந்து என்னை பார்த்து கொள்கிறார். நான் என் மகனுக்காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டது கிடையாது. நீயாக போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு என்று சொல்லிவிட்டேன். நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும் என்றேன்.

நான் ஏற்கனவே 80 முறை இறந்தவன். 81வது முறை இறக்க ஒன்றும் இல்லை. என் வாழ்க்கையில் தோற்றுப் போக நான் எடுத்த முடிவுகளே காரணம். சமீபத்தில் கலந்துகொண்ட விழாவில் என்னிடம் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்கள். அதற்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். முதலில் அனைவரும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்