சினிமா துளிகள்

இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் - பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு

இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என பிரபல நடிகரின் திடீர் அறிவிப்பால் அதிர்ந்து போன ரசிகர்கள்.

தினத்தந்தி

2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இதில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து அல வைகுந்தபுரமுலோ, ஜதிரத்னலு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஸ்கைலேப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு