சினிமா துளிகள்

ஜெயில் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

முக்கியக் கதாபாத்திரங்களில் பள்ளிப்பருவத்திலே படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்