கடந்த வருடம் அவர் நடித்து வட சென்னை, மாரி-2 ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அவர் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதற்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது. தனுஷ் நடித்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட கால தயாரிப்பில் இருந்து வந்தது. இந்த படத்தில் தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்!