மாவட்ட செய்திகள்

கல்வராயன்மலையில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு

கல்வராயன்மலையில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் கோபி(வயது 19). இவர் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரும் மினி லாரியில் ஊரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு கல்வராயன்மலையில் உள்ள வயலம்பாடி கிராமத்தில் மணிகண்டன் என்பவரின் நிலத்தில் இறக்கி விட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். மினி லாரியை பிரசாத் ஓட்ட கோபி அருகில் அமர்ந்து இருந்தார்.

வயலம்பாடி மலைப்பாதை வளைவில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரசாத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். விபத்து குறித்து கரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.