மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி செயலர் தேவராஜன் வாழ்த்தினார். பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். விழாவில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்கம், இளையோர் செஞ்சுலுவை சங்க மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சீதாராமன், ஆசிரியைகள் மைதிலி, மணிவள்ளி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முத்துவேலன் நன்றி கூறினார்.

ராதாபுரம் என்.வி.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியை பாக்கியவதி பிளாரன்ஸ் தலைமை தாங்கி கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் பொருளாளர் கோவிந்தன் கலந்து கொண்டார். முதுகலை பொருளாதார ஆசிரியர் ஜேசுராஜ் சிறப்பு உரையாற்றினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஜிம்சால்ட்டர் மற்றும் ஆங்கில ஆசிரியர் தனபால் ஆகியோர் பேசினர். டைட்டஸ் தவமாலை நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.