அறைகளில் அமைந்துள்ள ஒவ்வொரு சர்க்கியூட்டுக்கும் ஒரு பியூஸ் இருக்கும். எதிர்பாராமல் ஏற்படும் மின் பழுது காரணமாக, பியூஸ் இணைப்பு துண்டிக்கப்படும்போது ஒவ்வொரு முறையும் அதை மாற்றவேண்டும். அதனால், அந்த இடங்களில் மினியேச்சர் சர்க்கியூட் பிரேக்கர் (Miniature Circuit Breaker-MCB) என்ற அமைப்பை பயன்படுத்துவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளுக்கும் அதை பொருத்தினால், சர்க்யூட் பழுது ஏற்பட்ட அறையில் டிரிப் ஆகி விடுவதால், பியூஸ் போவதற்கு முன்னரே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.