மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் பிரபாகர் (வயது 23). இவர் பி.எஸ்சி (சமையல் கலை) படிப்பு படித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு சென்று வேலை பார்க்க ஆர்வமாக இருந்துள்ளார்.ஆனால் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலையால் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் மனம் உடைந்த பிரபாகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.