இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 991 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,659 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 6 பேர் இறந்து உள்ளனர்.