புதுச்சேரி

இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி

நமோ ஆக்கி போட்டியில் இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை மாநில பா.ஜ.க. மற்றும் லே புதுச்சேரி ஆக்கி அமைப்பு சார்பில் லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நமோ ஆக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று கால் இறுதி போட்டிகள் நடந்தன. பெங்களூரு எம்.ஆர்.ஜி. அணியும், பிரண்ட்ஸ் ஆக்கி கிளப் அணியும் மோதிய போட்டியில் 10-3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எம்.ஆர்.ஜி. அணி வெற்றிபெற்றது. சென்னை இந்தியன் வங்கி அணி கேரள அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சென்னை ஜி.எஸ்.டி. கஸ்டம்ஸ் அணி, நமோ ஆக்கி கிளப் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது. எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணி, அர்ஜூன் ஆக்கி கிளப் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. வெற்றிபெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி, இறுதி போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து