மும்பை

சிறை கலவர வழக்கை ரத்து செய்யக்கோரி இந்திராணி முகர்ஜி ஐகோர்ட்டில் மேல் முறையீடு

சிறை கலவர வழக்கை ரத்து செய்யகோரி இந்திராணி முகர்ஜி ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பை,

சிறை கலவர வழக்கை ரத்து செய்யகோரி இந்திராணி முகர்ஜி ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கைதி உயிழப்பு

முன்னாள் ஊடகவியலாளரான இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 7 ஆண்டுகால சிறை வாழ்க்கையை கழித்துவிட்டு கடந்த 20-ந் தேதி ஜாமீன் பெற்று விடுதலையானார்.

இந்தநிலையில் ஷீனா போரா சிறையில் இருந்தபேது, கடந்த 2017-ம் ஆண்டு சக கைதியாக இருந்த மஞ்சுளா ஷெட்டியை சிறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. சிகிச்Indrani Mukherjee appeals to the High Courtசைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

சிறையில் போராட்டம்

இந்த மரணத்தைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை தூண்டிவிட்டதாக போலீசார் அப்போது சிறையில் இருந்த இந்திராணி முகர்ஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது ஜாமீனில் உள்ள இந்திராணி முகர்ஜி மும்பை போலீசார் தனக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கேரி தனது வழக்கறிஞர் மூலம் மே 19-ந் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரத்து செய்ய வேண்டும்...

அந்த மனுவில், "இந்திராணி முகர்ஜி சிறை கலவரத்தில் ஒரு பகுதியாகவோ அல்லது சிறையில் தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடவோ இல்லை. போலியான, தெளிவற்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் அவரது பங்கு ஏதும் இல்லை. எனவே அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும்" என கோரப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டில் நாளை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்