கரூர் 
மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் அண்ணன்- தம்பி படுகாயம்

சாலை விபத்தில் அண்ணன்- தம்பி படுகாயம் அடைந்தனர்.

தோகைமலை,

திருச்சி இனாம்குளத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 44). இவரது தம்பி முகமது மூசா (42). இந்தநிலையில் அக்பர் அலி தோகைமலை அருகே குருணி குளத்துப்பட்டியில் உள்ள தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் முகமது மூசாவுடன் வந்து பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மொட்டை காமநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது.

இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.