தொழில்நுட்பம்

நாய்ஸ் விஷன் 3 ஸ்மார்ட் கடிகாரம், வி.எஸ் 103 புரோ வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

தினத்தந்தி

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் புதிதாக விஷன் 3 என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.96 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்கக் குறைபாடு, மன அழுத்தம், மகளிர் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட உடலியல் சார்ந்த பிரச்சினை களை துல்லியமாக இது கண்டறியும். 100 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டா லும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இந்தக் கடிகாரம் துல்லியமாக காட்டும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும் வகையில், இதில் 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. சிலிக்கான் ஸ்டிராப்புகள் கருப்பு மற்றும் பச்சை வண்ணத்திலும், உலோக ஸ்டிராப்புகள் கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களிலும் கிடைக்கும். சிலிக்கான் ஸ்டிராப்பு மாடலின் விலை சுமார் ரூ.3,999. உலோக ஸ்டிராப் மாடலின் விலை சுமார் ரூ.4,999.

வயர்லெஸ் இயர்போன்

நாய்ஸ் நிறுவனம் புதிதாக வி.எஸ் 103 புரோ என்ற பெயரில் வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 மணி நேரம் செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஹைப்பர்சிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதில் இரைச்சலைத் தவிர்க்கும் குவாட் மைக் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,119.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை