சினிமா துளிகள்

தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன்-2 படம் கைவிடப்பட்டதா?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவன் படம் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.

தினத்தந்தி

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் செல்வராகவன் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான போஸ்டரையும் வெளியிட்டார். இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்துக்கான ஆய்வு மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக தயாரிப்பாளர்கள் அதிக செலவு செய்துள்ளதாகவும் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகம் ஆகும் என்பதால் படத்தை கைவிட முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இதற்கு பதில் அளித்து செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எப்போது அந்த மர்மமான முன் தயாரிப்பு பணிகள் நடந்தன என்பதை சொல்ல முடியுமா? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என்று கூறமுடியுமா? உங்களது தரப்பில் இருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் 2-ம் பாகம் உருவாவதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு