தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
சோனியா அகர்வாலிடம், உங்களின் முன்னாள் கணவர் (டைரக்டர் செல்வராகவன்) இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நீங்களும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு சோனியா அகர்வால், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. இப்படியே சிங்கிள் ஆக இருந்துவிட்டு போவது என முடிவு செய்து இருக்கிறேன் என்றார்.